வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி - நடிகர் கார்த்தி

Actor Law Withdraw Karthi Farms
By Thahir Nov 19, 2021 07:07 AM GMT
Report

அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.

ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்.

ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது உள்ளிட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்று வருகின்றனர்.இந்திலையில் நடிகர் கார்த்தியும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்,மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது,

தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என தெரிவித்துள்ளார்.