300 விவசாயிகள் மரணம்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #300DeathsAtProtest ஹாஷ்டேக்.!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி நான்கு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் பேரணியில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஆன பேச்சுவார்த்தை ரத்தானது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் தற்போது வரை விவசாயிகள் போராட்டத்தில் 300 விவசாயிகள் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து #300DeathsAtProtest என்கிற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் இந்த ஹாஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.