ஊரடங்கால் தேங்கிய நெல் மூட்டைகள் - கொள்முதல் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்
தமிழக உணவுத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் வீணாகும் நெல் மூட்டைகள். அறுவடை செய்த நெல்லை வாங்க வியாபாரிகள் வராததால் கவலையில் உள்ள விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட சண்முகநதி, மானூர், கோரிக்கடவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது நெல் விளைச்சல் முடிந்து அறுவடை செய்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நெல் மூட்டைகள் விற்பனையாகாமால் தேக்கமடைந்துள்ளது. மேலும் தற்போது பெய்த மழை காரணமாகவும் அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து உள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பாகவும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக நெல் உற்பத்தி செய்த செலவைவிட மிகவும் குறைவான விலைக்கு கேட்பதால் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இரண்டு துறை அமைச்சர்களும் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்த போதும் நெல்களை விற்க முடியாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும், எனவே நெல் பயிர்கள் வீணாவதை தடுக்க உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.