அழியும் நிலையில் ரோஸ் ஆப்பிள்: தமிழக அரசு தலையிட்டு பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
கொடைக்கானலில் அழியும் தருவாயில் உள்ள மருத்துவத்தன்மை கொண்ட வாட்டர் ரோஸ் ஆப்பிள் பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவத்தன்மை வாய்ந்த வாட்டர் ரோஸ் ஆப்பிள் அதிகமாக கேரளாவில் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டும் விளைகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளங்கி கோம்பை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மிக குறைந்த அளவிலேயே வாட்டர் ரோஸ் ஆப்பிள் மரங்கள் உள்ளன.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் இப்பழங்கள் விளைகிறது. இவ்வகை பழங்கள் நெல்லிக்காய் வகைகளில் ஒன்றாகும், இந்த பழங்கள் புளிப்பு சுவை தன்மை கொண்டது.
இந்த பழம் நீரிழிவு நோயை குணப்படுத்தும். மேலும் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, கை கால் வலிப்பு, ரத்தத்தின் கொழுப்பு அளவையை குறைக்கவும், வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டதாக மலை கிராம விவசாயிகளால் கூறப்படுகின்றனர்.
அழிவின் விளிம்பில் உள்ள இந்த பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது