எம்.எல்.ஏ செய்த காரியத்தால் ஜட்டியுடன் ஓட விட்ட விவசாயிகள்!
டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரி 120 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டி நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடெங்கிலும் விவசாயிகள் ஆதரவு கொடுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் அபோஹார் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. அருண் நாரங், மாலவுட்டில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தில் அவர் பங்கேற்க வரும்போது விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதை கண்டுக்கொள்ளாமல் எதிர்ப்பையும் மீறி உள்ளூர் பாஜகவினர் துணையுடன் காரை விட்டு இறங்கி கூட்டத்திற்குச் செல்ல முயன்றார் எம்.எல்.ஏ.

அப்போது, ஆத்திரம் கொண்ட விவசாயிகள் எம்.எல்.ஏவை சூழ்ந்துகொண்டார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அவர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது அவரது சட்டையை பிடித்து இழுத்ததில் சட்டை முழுவதுமாக கிழிந்தது. ஓடிச்சென்று காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்த போது பிடித்து இழுத்ததில் எம்.எல்.ஏவின் கீழாடையும் கிழிந்து போனது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடமிருந்து எம்.எல்.ஏ.வை மீட்டு ஜட்டியுடனேயே காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.