பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லியில் போராடும் விவசாயிகள்

Farmers protest Bjp Assembly elections
By Petchi Avudaiappan Jul 12, 2021 12:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் விவசாயிகள் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அதனை தக்கவைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.

பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லியில் போராடும் விவசாயிகள் | Farmers Participate In North India Elections

அதேசமயம் டெல்லியில் 8 மாதங்களாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி விவசாயிகளும் இந்த தேர்தலை குறிவைத்துள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் விவசாயிகள் பிரச்சாரம் செய்தனர்.

அந்த வகையில் வட மாநில தேர்தல்களில் இந்தப் பிரச்சாரத்தை தீவிரமாகவும், தேவைப்படும் பட்சத்தில் வேட்பாளராக களம் இறங்கவும் விவசாயிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.