விவசாயிகள் நகைக்கடன் தள்ளுபடி - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

minister chief farmer stalin
By Jon Mar 02, 2021 07:50 PM GMT
Report

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விவசாயிகளின் நகைக்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.