டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் வாபஸ்
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர்.
கடும் குளிரிலும், பனியிலும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், 700 விவசாயிகள் மரணடைந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றபப்ட்டது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கோரிக்கைகளை ஏற்று நேற்று கடிதம் எழுதிய நிலையில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லி எல்லைகளில் தங்களது கூடாரங்களை விவசாயிகள் அகற்றி வருகின்றனர்.