ஜேம்ஸ் பாண்ட், போல கோட் சூட் போட்டா, அதுக்கு பேரு ஆய்வா ? .கொந்தளித்த ஜெயக்குமார்
ஜேம்ஸ் பாண்டு போல, கோட் சூட் போட்டு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு என்ற பெயரில் நாடகமாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்ச்சித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் கனமழியால் சென்னையில் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் , சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கி வழங்கினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் :
4நாட்களாக மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொய்யின் மொத்த உருவமே திமுக தான், என குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜேம்ஸ் பாண்டு போலவும், சங்கர் லால் போலவும் கோட் சூட் போட்டுகொண்டு ஆய்வு என்ற பெயரில் நாடகமாடிகிறார் என ஜெயக்குமார் விமர்ச்சித்துள்ளார்.