1 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

Onion
By Thahir Feb 25, 2023 08:06 AM GMT
Report

மராட்டியத்தில் ஒரு கிலோ வெங்காயத்தை விவசாயி ஒருவர் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் 

மராட்டிய மாநிலம் பார்ஷி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் இவருக்கு வயது 58. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 512 கிலோ வெங்காயத்தை விற்றத்தில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது.

farmer-who-sold-a-kilo-of-onion-for-rs-1

வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் துாரம் கொண்டு சென்றததற்கான லாரி வாடகை, சுமை கூலி, ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது.

அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய் தான்.

கண்ணீர் வடிக்கும் விவசாயி 

இதற்கு வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர் ரூ.2க்கான காசோலையை கொடுத்துள்ளார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகு தான் பணமாக்க முடியும்.

அந்த விவசாயி இந்த வெங்காயத்தை விளைவிக்க ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளார். கட்நத 4 அண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளின் விலை 2 மடங்களாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன் இந்த ஆண்டு மொத்தம் 2 ரூபாய் தான் கிடைத்துள்ளது.