குடியரசு தின பேரணியைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல விவசாயிகள் முடிவு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களைத் தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதுமிலிருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. மத்திய அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
வேளாண் சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரி வருகிற ஒன்றரை ஆண்டுகள் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிற அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.