டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

india protest village
By Jon Jan 28, 2021 03:23 AM GMT
Report

டெல்லியில் நடைபெற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டதாக விவசாய சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து சிங்கு எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு - டிராக்டர் பேரணியில் விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளது.

அதேநேரம், இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபடவில்லை என்றும், சில சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் - விவசாய சங்கம் குற்றச்சாட்டு | Farmer Terrorist Delhi

பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் உடனடியாக அந்தந்த போராட்ட களங்களுக்கு திரும்புமாறும் விவசாய சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

தங்களின் போராட்டம் அமைதியாக தொடரும் என்றும், அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் முடிவு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.