உலகளவில் விவசாயிகள் போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.