தமிழகத்தில் விவசாயிகள் வருகிற 18ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்
road
rally
railway
By Jon
வரும் 18ம் தேதியன்று விவசாயிகள் நாடு தழுவிய அளவில் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் டெல்லியை அடுத்த சிங்கூவில் நடத்தும் போராட்டம் 78 நாட்களாகிய நிலையில் பேச்சுவார்த்தைகளில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற்றால் மட்டுமே திரும்பிச் செல்வோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், அடுத்த கட்டமாக நான்கு மணி நேரம் ரயில் மறியல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.