விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் ஒட்டிய ராகுல் காந்தி
ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி டிராக்டர் ஒட்டிய சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரூபங்கர் பகுதியில் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபியர்களின் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டார். மேலும் இந்த போராட்டத்தின்போது டிராக்டர் ஒட்டி தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டத்தில் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:- புதிய வேளாண் சட்டங்களால் பசி, வேலைவாய்ப்பின்மை, தற்கொலை போன்றவை அதிகரிக்கும்.பிரதமர் அவர் விருப்பங்களைத் தருகிறார் என்று கூறுகிறார். ஆம், அவர் கொடுத்துள்ளார் பசி, வேலையின்மை மற்றும் தற்கொலை ஆகியவற்றை. பிரதமர் விவசாயிகளுடன் பேச்சு நடத்த விரும்புகிறார், ஆனால் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை அவர்கள் பெச்சு நடத்த மாட்டார்கள்.
விவசாயம் 'பாரத் மாதா'வுக்கு சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு அல்ல என கூறினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கோவிந்த் சிங் தோட்ஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.