87-வது நாளாக போராடும் விவசாயிகள் போராட்டம்: நாளை விவசாயிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கின்றார்

india politician Arvind Kejriwal
By Jon Feb 26, 2021 01:35 PM GMT
Report

வேளாண் சட்டத்தினை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 3 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் நடத்தபட்ட 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். டெல்லியில் 87-வது நாளாக போராடி வரும் விவசாயிகள் நாட்டின் பல இடங்களில் போராட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் அமைதி திரும்புவது குறித்து விவசாய அமைப்புகளுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.