விவசாயிகள் - மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது வரை பலகட்ட நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய அரசு தெரிவித்த பரிந்துரையை விவசாயிகளின் சங்கங்கள் நிராகரித்துவிட்டன. ஆனால் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் நரேந்தர் சிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் இந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பதற்கு தேதி குறிப்பிடப்படவில்லை.