விவசாயி அடித்து கொடூர கொலை - குப்பையாக சடலத்தை வீசிசென்ற அவலம்!
murder
body
farmer
taken
By Anupriyamkumaresan
விழுப்புரம் அருகே விவசாயியை அடித்து கொடூரமாக கொலை செய்து வயல்வெளியில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈச்சூர் கிராமத்தில் வயல்வெளியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சடலமாக கிடந்தவர் விவசாயி சிவக்குமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனை முடிவில், மர்மநபர்கள் விவசாயியை கொடூரமாக தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,
கொலை செய்து சடலத்தை வீசி சென்ற கொடூர அரக்கர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.