தக்காளி திருடு போகாமல் இருக்க வயல் முழுக்க CCTV பொருத்திய விவசாயி - எவ்வளவு செலவில் தெரியுமா?
தக்காளி திருடு போகாமல் இருக்க விவசாயி ஒருவர் வயல் முழுக்க CCTV கேமராக்களை பொறுத்தியுள்ளார்.
சிசிடிவி பாதுகாப்பு
தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தமிழகத்திலேயே ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. வெளிமாநிலங்களில் சுமார் ரூ.400 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் காரணமாக நாடு முழுவதும் பல வினோத சம்பவங்களும், குற்றச் சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் நகைச்சுவையான சம்பவங்களும் அரங்கேறி வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள விவசாயி ஒருவர் தனது வயலில் தக்காளி பயிரிட்டிருக்கிறார். தக்காளி திருடு போகாமல் பாதுகாப்பதற்காக வயலில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தியுள்ளார்.
விவசாயி பேச்சு
இதுகுறித்து அந்த விவசாயி பேசுகையில் 'தனது 1.5 ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளதாகவும், அதன் மூலம் ரூ.6-7 லட்சத்தை எளிதில் பெற முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கங்காபூர் தாலுகாவில் உள்ள தனது பண்ணையில் 20-25 கிலோ தக்காளி திருடப்பட்டுவிட்டது.
இதனால் எஞ்சியுள்ள காய்க்காத பயிரை பாதுகாக்க ரூ.22000 செலவு செய்து சிசிடிவி கேமராக்களை பொருத்தியதாகவும், இது காலத்தின் தேவை என்றும் பேசியுள்ளார்.