குடியரசு தினத்தன்று 1 லட்சம் ட்ராக்ட பேரணி: விவசாயிகள் அறிவிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவ.26ம் தேதியில் இருந்து டெல்லியின் புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தும் விவசாயிகள் இடைவிடாது போராடிவருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது.
இந்த நிலையில், ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அந்த பேரணியில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்துள்ளனர்.