வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, இன்று அங்கு பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் பேசிய அமித்ஷா கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதையே முன்னுரிமையாக அரசு கொண்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பலமடங்கு உயர்த்த உதவும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானால் விற்கலாம்.
ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தேவையில்லாமல் விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.