விவசாயிகளோடு அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

goverment farmer delhi
By Jon Jan 15, 2021 08:40 PM GMT
Report

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரிலும் 52 வது நாளாகபோராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளோடு 9ம் கட்ட பேச்சுவார்த்தை, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோரும் விவசாய சங்கங்களின்40 பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அப்போது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாய சங்கம்உறுதியாக கூறினார். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடு எட்டப்படாமல், தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 19ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.