தீவிரமடையும் உண்ணாவிரத போராட்டம்; 150 ரயில்கள் ரத்து - விவசாய தலைவர் காலைக்கிடம்!
போராட்டத்தை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டம்
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில்,

பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான கனவ்ரி பகுதியில் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த நவம்பர் 26ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ரயில் சேவை ரத்து
35-வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கும் தலைவருக்கு ஆதரவாக பஞ்சாப் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் விவசாயிகள் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில் ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் அவரை
மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பஞ்சாப் அரசின் எந்த மருத்துவ உதவியையும் தல்லேவால் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan