20 மணிநேர போராத்திற்கு பிறகு கிடைத்த உடல் - தொடர்மழையால் விவசாயிக்கு நேர்ந்த துயரம்
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மற்றும் கோவிந்தம்மாள் தம்பதிக்கு அருள்மணி, அகிலா, ஆர்த்தி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
சமீபத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இவர்களது விவசாய கிணற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனை சரி செய்ய விவசாயி பழனி கிணற்றைச் சுற்றி இருந்த புதர்ச்செடிகளை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளார்.
அதன்படி கிணற்றைச் சுற்றி இருந்த செடிகளை அவர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர் எதிர்பாராத விதமாக கிணற்றின் மண் திட்டு சரிய தொடங்கியுள்ளது.
இதனால் நிலைதடுமாறிய பழனி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்த ஊர்மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பழனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.