முதல்முறை குங்குமப்பூ விளைவித்த விவசாயி - 1 கிலோ இவ்வளவுக்கு விற்பனையா?

Dindigul
By Sumathi Nov 25, 2023 10:07 AM GMT
Report

குங்குமப் பூ விளைவித்து விவசாயி சாதனை படைத்துள்ளார்.

குங்குமப் பூ

கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி என்ற மலைகிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் விவசாயியாக உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து குங்குமப் பூ விதை வாங்கி வந்து பசுமைக் குடில் அமைத்து சாகுபடி செய்திருக்கிறார்.

saffron

ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் குங்குமப் பூ சாகுபடியை செய்து வந்துள்ளார்.

போதைக்காளான் விற்ற விக்டோரியா ராணி; கொரியர் கூட இருக்கு - அதிர்ந்த கொடைக்கானல்!

போதைக்காளான் விற்ற விக்டோரியா ராணி; கொரியர் கூட இருக்கு - அதிர்ந்த கொடைக்கானல்!

அமோக விற்பனை

இந்நிலையில், ஒரு ஏக்கர் குங்குமப் பூ சாகுபடி மூலம் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்டியுள்ளார். இதுகுறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு இயக்குனர் வெங்கிடசுப்ரமணியன் கூறுகையில்,

kodaikanal

இந்தியாவில் காஷ்மீரில் தான் குங்குமப்பூ சாகுபடி அதிகம் நடக்கிறது. அவற்றை விட இங்கு பூக்களின் அளவு 1.5 மி.மீ. அதிகமாக உள்ளது. சிறந்த தரத்துடனும், மணத்துடனும் உள்ளன. காந்தலூர் பெருமலையில் நிலவும் காலநிலை, மண் வளம் குங்குமப்பூ சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த முறை 5 ஏக்கரில் குங்குமப்பூ சாகுபடி செய்ய உள்ளதாக மூர்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், வண்டன்மேடு சேற்றுக்குழியில் விவசாயி அருணும் குங்குமப்பூ சாகுபடி செய்துள்ளார். அவையும் பூக்கத் துவங்கியதாகத் தெரிவித்தனர்.