விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை - காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

india protest delhi
By Jon Jan 29, 2021 01:57 PM GMT
Report

 டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக FIRல் இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. FIRல் பெயர் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ய டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியில், அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

அப்போது, விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அது வன்முறையாக உருமாறியது. பின்னர், விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை - காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது! | Farmer Fir Police Court

செங்கோட்டையில் உள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகளவு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியது.

இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது FIR பதிவு செய்துள்ளதுள்ளது. டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக FIRல் இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.