கொரோனா நோயாளிகளுக்காக இரண்டரை டன் வாழைப்பழங்களை விவசாயி
தஞ்சையில் கொரோனா நோயாளிகளுக்காக இரண்டரை டன் வாழைப்பழங்களை விவசாயி ஒருவர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான அனைத்து விதமான வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளும் விளைந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாரைச் சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் கடந்த ஆண்டு இரண்டு டன் வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
இந்த ஆண்டும் விளைந்த வாழைப்பழத்தை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்த அவர், அதனை சொந்த செலவில் வெட்டி வாகனத்தில் எடுத்துவந்து கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தோட்டக் கலைத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.