டெல்லி போராட்டத்தில் எங்களை தாக்கியது விவசாயிகள் அல்ல: போலீசார் வெளியிட்ட உண்மை
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என விவசாயிகள் சங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், வன்முறை கலவரத்தில் தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
53 வயதான காவல்துறை துணை ஆணையர் ஜொகீந்தர் ராஜ் கூறுகையில், என்னுடைய பணியில் நிறைய பேராட்டங்கள், கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை சந்தித்துள்ளேன். ஆனால் இதுபோன்றதொரு கலவரத்தை பார்த்தது இல்லை, எந்த பக்கம் இருந்து எங்களை தாக்கினார்கள் என்றுகூட தெரியவில்லை.
முதுகு, தோள்பட்டையில் கடுமையாக தாக்கினார்கள், தொடர்ந்து என்னை வாளால் வெட்ட முயன்றபோது அங்கிருந்து தப்பிப்பேன், இருப்பினும் விடாமல் எங்கள் மேல் கற்களை எறிந்தார்கள் என தெரிவித்துள்ளார்.