விவசாயிகள் போராட்டம்: இந்திய அளவில் டிரெண்டாகும் #AntiNationalBollywood
இந்தியளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது #AntiNationalBollywood என்ற ஹெஷ்டேக் . மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததால் டெல்லியே ஸ்தம்பித்தது, தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை முடக்குவதற்கான வேலைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. சமீபத்தில்கூட, பிரபல பாடகியான ரிஹானா, விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு டுவிட் செய்தார், அவரது டுவிட் வைரலாக எதிர்ப்பு தெரிவித்து நடிகை கங்கனா ரனாவத் டுவிட் செய்திருந்தார்.
இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு எதிராக பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி மற்றும் விளையாட்டு வீரர்கள் சுரேஷ் ரைனா, ரவி சாஸ்திரி, வீராங்கனை பிடி, உஷா பலர் உள்ளிட்டவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில், #indiaagsinstpropaganda #IndiaTogether என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த #IndiaRejectsPropaganda என்ற ஹெஷ்டேக் இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்களுக்கு எதிராக #AntiNationalBollywood என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.