பாரதிகண்ணம்மா வெண்பா சீரியலில் இருந்து விலகல் - காரணம் என்ன?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இத்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா.
இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பெரும் பெயரை பெற்று கொடுத்தது இந்த சீரியர் தான். இதனிடையே ஃபரீனா சீரியல்கள் நடித்து கொண்டிருந்த போதே கர்ப்பம் அடைந்தார் இதை அவர் அறிவித்தார்.
இதனால் ஃபரீனா சீரியலில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவின.இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
3 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் சீரியலில் நடிக்க வெண்பாவாக களம் இறங்கினார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரீனா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.
அண்மையில் ஃபரீனா வெளியிட்டு இருந்த ரிலீஸில் கூட , ஒரு ரசிகர், ஒரு பக்கம் சீரியலில் பிஸியோ பிஸி கிடைக்கும் கொஞ்சம் நேரத்திலாவது குழந்தையுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்.
ரீல்ஸ் எல்லாம் அப்புறம் எடுக்கலாம் என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு ஃபரீனா மிகவும் காட்டமான விளக்கத்தை பதிலாக அவருக்கு கொடுத்து இருந்தார்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை தவிர ஃபரீனா கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் சீரியலிலும் பவானி என்ற ரோலில் நடித்து வந்தார்.
இதிலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில், ஃபரீனா தற்போது பவானி ரோலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லை, அந்த கதாபாத்திரத்தில் இனிமேல் ராஜ பார்வை சீரியல் புகழ் கீர்த்தி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை IBC Tamil

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
