41 வயது நடிகையுடன் இரண்டாம் திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்கான் அக்தர் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அறிமுகமான ஃபர்கான் அக்தர் 2008ம் ஆண்டு வெளியான ராக் ஆன் திரைப்படம் மூலமாக ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பாகா மில்கா சிங் படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்தது. அந்த படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டூஃபேன் திரைப்படம் பாக்சிங் படமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட்டான அதுனா பாபானி என்பவரை நடிகர் ஃபர்கான் அக்தர் திருமணம் செய்து கொண்டார் . கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்த இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். நடிகை ஒருவருடன் ஃபர்கான் அக்தர் தொடர்பில் இருந்ததாக எழுந்த பிரச்சனை தான் அதற்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரபல பாலிவுட் நடிகை மற்றும் பாடகியான ஷிபானி தந்தேக்கருடன் ஃபர்கான் அக்தர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனது இரண்டாவது திருமணத்திற்கு ஃபர்கான் அக்தர் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 41வது நடிகை ஷிபானி தந்தேக்கரை தான் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி 48 வயதாகும் ஃபர்கான் அக்தர் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், எளிமையான முறையில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதமாக இந்த திருமணம் நடைபெறும் என்றும் ஃபர்கான் அக்தரின் தந்தை கூறியுள்ளார்.