எவ்வளவு சொன்னாலும் ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்யும் தனுஷ் - கடுப்பான ரசிகர்கள்

Dhanush Maaran MalavikaMohanan
By Petchi Avudaiappan Mar 14, 2022 04:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

நடிகர் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். 

'தொடரி', 'பட்டாஸ்' போன்ற படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷூடன் 3வது முறையாக இணைந்துள்ள மாறன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படமானது மார்ச் 11 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

எவ்வளவு சொன்னாலும் ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்யும் தனுஷ் - கடுப்பான ரசிகர்கள் | Fans Worry About Actor Dhanush Maaran Movie

இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ராம்கி, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருக்கிற பிரச்சனை போதாதென்று படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் உண்மையை அப்புறம் சொல்றேன் என கூற சமூக வலைத்தளங்கள் பற்றி எரிய ஆரம்பித்தன. 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாறன் திரைப்படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. குறிப்பாக கடைசி 3 படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. 

இனியாவது ரசிகர்களை கவரும் வண்ணம் தனுஷ் கதையை தேர்வு செய்வாரா என கேள்வியெழுந்துள்ளது.