அந்த மாரி புகைப்படத்தை தான் ரசிகர்கள் விரும்புவார்கள் - நடிகை மாளவிகா மோகனன்

Malavika Mohanan
By Thahir May 22, 2022 06:59 PM GMT
Report

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் அறிமுகமானார்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யுக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார்.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் ஏமாற்றமடைந்தது. மாறன் படத்திற்கு பிறகு மாளவிகா வேறு எந்த தமிழ் படத்திலும் இதுவரை கமிட் ஆகவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் மாளவிகா விதவிதமாக ஃபோட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி அவ்வப்போது புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து லைக்ஸுகளை தெரிவிக்கவிடுவார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை மாளவிகா மோகன் வெளியிட்டு வருகிறார்.

இதனாலேயே இவரை பல மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மாறன் படத்தில் தனுஷுடன் நெருக்கமான காட்சியில் மாளவிகா நடித்திருந்தார்.

இதனால் ஒரு ரசிகர் தனுசுடன் படுக்கை அறை காட்சிகள் நடிக்கும் போது எத்தனை டேக்குகள் எடுத்தீர்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு மாளவிகா மோகன் அந்த இடத்தை விட உங்கள் மூளையில் இருக்கும் இடம் தான் மிகவும் கேவலமானது என்று கூறி சரியான பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது மற்றொரு ரசிகர் நீங்கள் திறமையான நடிகை எல்லாம் கிடையாது. அது உங்களுக்கே தெரியும்.

மாளவிகாவின் ரசிகர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் நீங்கள் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காக மட்டும்தான் உங்கள் ரசிகர் என கூறிக் கொள்கிறார்கள் என பதிவிட்டிருந்தார்.

அதற்கு மாளவிகா மோகன் எனக்கும் அது தெரியும், அப்படி என்றால் நீங்களும் என்னுடைய புகைப்படத்தை பார்ப்பதற்காக தான் வந்தீர்களா என அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.