சரியாக விளையாடமாட்றாரு... - கே.எல்.ராகுலை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்...! வைரலாகும் புகைப்படம்
சரியாக விளையாடமாட்றாரு என்று கே.எல்.ராகுலை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கே.எல்.ராகுலை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவுடனான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டாக்காவில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய தரப்பில், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு COMEBACK கொடுத்த உனாத்கட் (UNADKAT) 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் வங்களாதேசத்தின் ஸ்கோரைக் கடக்க 227 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தியா 2-வது நாளில் முதல் அமர்வில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் தோல்வியடைந்தார். இந்திய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 2வது டெஸ்டில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படத் தவறியதால், அவரை அணியில் சேர்ப்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சமூகவலைத்தளங்களில் கே.எல்.ராகுலை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Trying to understand what goes on inside KL Rahul at the crease. pic.twitter.com/z6iQWtw2Rg
— Saurabh Malhotra (@MalhotraSaurabh) December 23, 2022
I am running out of words. Never seen such biasness for any player in international cricket. He will also open vs australia in next test series.#KLRahul #INDvBAN #BANvIND pic.twitter.com/MU5tF0ORm4
— Rishikesh Kumar (@RishikeshViews) December 23, 2022
Why #KLRahul is not able to judge the ball correctly?#BlurVision #MacroLens #INDvBAN pic.twitter.com/Rz82wTDaKZ
— Puntastic (@Puntastic101) December 23, 2022