இசை நிகழ்ச்சியில் பரபரப்பு; அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள் - வைரல் Video!

Tamil Cinema Anirudh Ravichander Tamil Actors Tamil Actress
By Jiyath Apr 11, 2024 02:31 PM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத் மீது ரசிகர்கள் பொருட்களை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் இவர், ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார்.

இசை நிகழ்ச்சியில் பரபரப்பு; அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள் - வைரல் Video! | Fans Throwing Things At Anirudh While Singing

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாலிவுட்டில் ஹிட் அடித்தது. அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி, தெலுங்கில் தேவரா உள்ளிட்ட படங்கள் அனிருத்தின் இசையமைப்பில் வெளிவரவுள்ளது.

ரசிகர்களின் செயல் 

இந்நிலையில் அனிருத் இசைநிகழ்ச்சி நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மேடையில் நின்றபடி அனிருத் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார். அப்போது கீழே இருந்து சில ரசிகர்கள் பொருட்களை தூக்கி மேடை மீது வீசுகிறார்கள்.

இசை நிகழ்ச்சியில் பரபரப்பு; அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள் - வைரல் Video! | Fans Throwing Things At Anirudh While Singing

தன்னை நோக்கி வந்த பொருட்களை பிடிப்பதிலும், கீழே விழுந்த பொருட்களை அப்புறப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இப்படிப்பட்ட அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை கூலாக கையாண்ட செய்த அனிருத்துக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.