காதலிப்பது ஒரு குத்தமா? - ஐஸ்வர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி, தனுஷ் ரசிகர்கள்

aishwaryarajinikanth aishwaryardhanush
By Petchi Avudaiappan Apr 03, 2022 11:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரஜினி, தனுஷ் ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கிட்டதட்ட 18 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின் இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் இருவரும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதனிடையே இப்பிரச்சனையில் இருந்து மீள ஐஸ்வர்யா மீண்டும் இயக்குநர் பணிகளில் பிசியாகி உள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய காதல் ஆல்பம் பாடலான முசாஃபிர் வெளியானது. இதனைத் தொடந்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தையும், ஓ சாத்தி சல் என்ற இந்தி படத்தையும் அவர் இயக்கவுள்ளார். 

இந்நிலையில் ஐஸ்வர்யா  கையில் காபி கப்புடன் ஐஸ்வர்யா வெளியிட்ட ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரஜினி, தனுஷ் ரசிகர்களை கடுப்பாகியுள்ளனர். மேலும் சரமாரியாக அவரை விளாசும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனைக் கண்ட ஐஸ்வர்யா ஒரு காபி லவ்வரா இருப்பது அவ்வளவு பெரிய குத்தமா? என புலம்பியதாக கூறப்படுகிறது.