விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் விலகிய முக்கிய பிரபலம்

Wimbledon tennis Simona Halep
By Petchi Avudaiappan Jun 25, 2021 11:01 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in டென்னிஸ்
Report

 விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் சிமோனா ஹாலெப் விலகியுள்ளார்.

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் ஜூன் 28 ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறவில்லை என்பதால் இந்த தொடரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் விலகிய முக்கிய பிரபலம் | Fans Saddened By Simona Halep Quits Wimbleton

இந்நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோமானியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த மாதம் ரோம் நகரில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்த்து விளையாடும்போது காயத்தால் அவர் வெளியேறினார்.

இதனிடையே காயம் முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸில் இருந்தும் சிமோனா ஹாலெப் விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.