அய்யயோ துபே இதோட போதும்..இவரை அணியில் சேருங்கள் - வலுக்கும் கோரிக்கைகள்!!

Indian Cricket Team Shivam Dube T20 World Cup 2024
By Karthick Jun 10, 2024 09:24 AM GMT
Report

தொடர்ந்து சொதப்பும் துபே 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய துபே, தொடரின் கடைசியில் சொதப்பினார். அதே ஃபார்மை அவர், தற்போது நடைபெற்று வரும் உலககோப்பையிலிலும் தொடர்ந்து வருகின்றார்.

Dube Indian Team

இந்தியா அணி இதுவரை 2 உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளது. ஐயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

போதும் 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமானதாக கருதப்படும் நிலையில், துபே 9 பந்துகளில் 3 ரன் மட்டுமே எடுத்தார். முதல் போட்டியில் விளையாட பெரிய தேவை இல்லை. ஆனால, நேற்று முன்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் துபே மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

தோற்ற பாகிஸ்தான்..மைதானத்திற்கு வெளியே....பாகிஸ்தான் ரசிகர்களின் செயலை கவனச்சிங்களா?

தோற்ற பாகிஸ்தான்..மைதானத்திற்கு வெளியே....பாகிஸ்தான் ரசிகர்களின் செயலை கவனச்சிங்களா?

ஆனால், அவர் ரசிகர்களை ஏமாற்றினார். தற்போது சமூகவலைத்தளங்களில் துபே மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஐபிஎல் வேறு, சர்வதேச விளையாட்டு வேறு என்பதை தற்போதாவது புரிந்துகொள்ளவேண்டும் என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Shivam Dube against Pakistan T20 world cup

இறுதியாக விளையாடிய 8 இன்னிங்ஸ்'ஸில் துபே 0, 0, 21, 18, 7, 14, 0*, 3 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ரிங்கு சிங்கை அணியில் சேருங்கள் என ஒரு தரப்பு ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைக்க துவங்கிவிட்டார்கள்.