‘’மீண்டும் அண்ணா வேண்டும் அண்ணா" - விஜய் படத்தை மார்ஃபிங் செய்து ஒட்டிய ரசிகர்கள்
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ,கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்து நினைவு கூறி வருகின்றனர்.
இதனிடைய மதுரையில் அண்ணா உருவத்தை மார்பிங் செய்து விஜய்யின் படத்தை வைத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில்,

"நாட்டிற்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார். பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாய் இருந்தார். எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா. தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா. அண்ணா யாரு தளபதி" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது