நம்ம தல சார் : தோனியின் ஆட்டத்தை பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட ரசிகர்கள் , வைரலாகும் வீடியோ
மகேந்திர சிங் தோனி இந்த பெயரை கேட்டாலே அவரது அதிரடி ஆட்டம் தான் ரசிகர்களுக்குவந்து செல்லும் ,சர்வதேச கிரிக்கெட்டில் தனது பேட் மூலம் கோலோச்சியவர். கடந்த 2020 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தோனி தனது பழைய ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை என்றும் ,அவரது வயதை சுட்டிக்காட்டி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் பத்தியில் ஆறு பந்துகளில் 18 ரன்களை எடுத்ததன் மூலம் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளதை தோனி நிரூபித்துள்ளார்.
அதனை பார்த்த தோனியின் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க பார்த்து ரசித்தனர். ஆட்டத்தை பார்த்த தோனியின் குட்டி ரசிகை ஒருவரது படம் வைரலாகி வருகிறது.