நெல்சனின் NCU Twist - ஜெயிலர் ட்ரைலரில் SK'வை கண்டுபிடித்த ரசிகர்கள்

Rajinikanth Sivakarthikeyan Anirudh Ravichander Nelson Dilipkumar Jailer
By Karthick Aug 06, 2023 02:12 AM GMT
Report

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் நடிகர் SK'வை கண்டுபிடித்து ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

ஜெயிலர் 

fans-finds-sk-in-jailer-trailer

 ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் என பலர் நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள "ஜெயிலர்" படம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் இருக்கும் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

ஜெயிலரில் SK

படத்தின் ட்ரைலரில் ரஜினி வீடு ஒன்று காட்டப்படும். அந்த வீட்டின் சுவற்றில் ரஜினியும் நடிகர் சிவகார்த்திகேயனும் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இருப்பதை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து இது நெல்சனின் cinematic universe என கமெண்ட் செய்து வருகின்றனர்.

fans-finds-sk-in-jailer-trailer

முன்னதாக ஜெயிலர் படத்தில் வசந்த் ரவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சனும், சிவகார்த்திகேயனும் முயன்றதாக கருத்துக்களும் உலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.