நம்ம ஆட்டம் இந்த முறை வேற மாதிரி : ஐபி எல் தொடரில் மாஸ்காட்டும் ஸ்டீவ் ஸ்மித்

IPL 2023 Steven Smith
By Irumporai Mar 28, 2023 06:50 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர்

தற்போது ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணி ஏலத்தில் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நம்ம ஆட்டம் இந்த முறை வேற மாதிரி : ஐபி எல் தொடரில் மாஸ்காட்டும் ஸ்டீவ் ஸ்மித் | Fans Expectation Raised After Steve Smith

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவர் ஆடி இருந்ததால், மீண்டும் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார் .

ஸ்டீவ் ஸ்மித்

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. களத்தில் விளையாடும் வீரராக அல்லாமல் வீரர்கள் விளையாட்டை வர்ணணை செய்யும் கமெண்ட்டேட்டராக பங்கேற்க உள்ளார்

. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித், உச்சத்தில் இருக்கும் போது ஐபிஎல் போன்ற முக்கிய தொடரில் வர்ணணை செய்ய உள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.