'நிம்மதியாக இருக்க செத்து போகலாம்' - நடிகை வனிதா பரபரப்பு பேச்சு

vanithavijayakumar UllaasaUlagam2 KanniTheevu ColorsTamil
By Petchi Avudaiappan Sep 01, 2021 12:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 எந்த பிரச்சனையுமே இல்லாமல் நிம்மதியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று வனிதா கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரிய திரையில் இருந்து ஒதுங்கியிருந்த வனிதா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அவரைத் தேடி மீண்டும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி அதில் இருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு விஜய் டிவியில் இருந்து தற்போது கலர்ஸ் டிவிக்கு சென்றுள்ளார்.

அங்கு ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் கன்னத்தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொள்ளும் நிலையில் இதன் ப்ரமோ வெளியானது.

அதில் நடிகர் ரோபோ சங்கர் வாழ்க்கையில் எந்த பிரச்சனையுமே இல்லாமல் நிம்மதியாக இருக்க என்ன பண்ணனும் என்ற கேள்வியை முன்வைக்கிறார். அதற்கு வனிதா சற்றும் யோசிக்காமல் செத்துடலாம் என தெரிவித்துள்ளார்.