மீண்டும் மீண்டும் தனுஷ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு - என்ன செய்யப் போகிறார்?
நடிகர் தனுஷின் ட்விட்டர் பதிவு ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே சோதனை காலமாக உள்ளது. அவர் நடித்து ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட படங்கள் தோல்வி படமாகி ரசிகர்களிடையே எதிர் விமர்சனத்தை பெற்றது.
அதேசமயம் இல்வாழ்க்கையிலும் அவருக்கு புயல் வீச ஆரம்பித்தது. 17 ஆண்டு கால காதல் மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ் இப்படங்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே சமீபகாலமாக தனுஷ் தன்னுடைய தமிழ் படங்களுக்கு ஒரு ட்வீட் கூட போட்டு ப்ரோமோஷன் செய்யாத நிலையில் பாலிவுட் படங்களுக்கு மட்டும் ஓடோடி ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றார் என குற்றச்சாட்டு ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது. ட்விட்டரில் நேற்று ஷாருக்கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இணையும் படத்தைப்பற்றிய அறிவிப்பை ஷாருக் கான் வெளியிட்டார்.
இதனை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் படங்களுக்கு காட்டும் அக்கறையை தமிழ் படத்திற்கும் காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
