மீண்டும் மீண்டும் தனுஷூடன் மோதும் ஐஸ்வர்யா - கொந்தளிக்கும் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது தனுஷ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கிட்டதட்ட 18 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின் இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் இருவரும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Happy birthday Amma !! I love you to the moon and back ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️????????????????? pic.twitter.com/TvaZnYsi12
— Dhanush (@dhanushkraja) April 14, 2022
இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தனுஷூம் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதனிடையே தனுஷின் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புகைப்படத்தை பதிவிட்டு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார்.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. pic.twitter.com/hWxh7AnD5Y
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 14, 2022
இதனைக் கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யாவின் பதிவு எதார்த்தமான ஒன்று இல்லை என்றும், காலையில் இருந்து பதிவிடாத நிலையில் தற்போது தனுஷ் பதிவிட்டதை பார்த்து வேண்டுமென்றே இதை அவர் செய்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஸ்டேட்டஸ் பதிவிடும் விவகாரத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே உரசல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.