சொந்த அணியை கண்டு கொதித்து எழும் இலங்கை ரசிகர்கள் - காரணம் என்ன?
தொடர்ந்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டி20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசால்டாக வெற்றி பெற்றது.
ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்ந்த இலங்கை கிரிக்கெட் அணி, சமீபகாலமாக வெறும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடரை மிக மோசமாக இழந்தது மட்டுமல்லாமல், இலங்கை வீரர்கள் வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறி வெளியே சென்று இங்கிலாந்தில் சுற்றியதால், மூன்று வீரர்கள் இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டதும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிக கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரசிகர்கள் #UnfollowCricketers என்ற ஹேஸ்டேக் ஒன்றையும் டிரண்ட் செய்து அதன் மூலம் இலங்கை வீரர்களின் சமூக வலைதள பக்கங்களை அன்ஃபாலோவும் செய்து வருகின்றனர்.