முகத்தில் ஏதோ ஒரு மாற்றம்..கதறி அழுதபடி வீடியோ வெளியிட்ட நடிகை யாஷிகா - ரசிகர்கள் அதிர்ச்சி!

Yashika Aannand
By Swetha Subash May 18, 2022 12:55 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளைஞர்களிடையே பிரபலமானார்.

மேலும் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.

முகத்தில் ஏதோ ஒரு மாற்றம்..கதறி அழுதபடி வீடியோ வெளியிட்ட நடிகை யாஷிகா - ரசிகர்கள் அதிர்ச்சி! | Fans Confuse As Yashika Anand Uploads Crying Video

பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிய அவருக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சாலை விபத்து அவரது வாழ்க்கையையே 3 மாதங்களுக்கு புரட்டி போட்டது என்றே சொல்லலாம்.

எழுந்து நடக்க முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்த அவர் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதேபோல் கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தியும் வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதும் தனது புகைப்படங்களை அப்லோட் செய்வதும் வழக்கம்.

அந்த வகையில் அவர் தற்போது ட்ரெண்டாகி வரும் அழுவதுபோல் அமையும் ஃபில்டரை பயன்படுத்தி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ஃபில்டரை உபயோகப்படுத்தி தனது தோழிகளுடன் அப்லோட் செய்திருக்கும் அந்த வீடியோவில் அவர்கள் எல்லோரும் சிரிக்கும்பொழுது அவர்க/லது முகத்தில் ஃபில்டர் விழுந்து பார்ப்பதற்கு கதறி கதறி அழுவதைபோல் அமைந்துள்ளது.

இதனால் குழப்பமடைந்த யாஷிகாவின் ரசிகர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.