"உள்ளாடை அணிந்து விளையாட வேண்டியது தானே" - கிரிக்கெட் வீராங்கனைக்கு ரசிகர் கொடுத்த சர்ச்சை ஐடியா

INDvsENG Kate cross ENGLAND women's cricket team
By Petchi Avudaiappan Jun 15, 2021 09:34 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report
107 Shares

 சரியான ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதற்கு ரசிகர் ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குள்ளான கருத்துக்கு இங்கிலாந்து வீராங்கனை கேட் கிராஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோல் கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிற டெஸ்ட் உடையை அணிந்து இரு அணி வீராங்கனைகளும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேட் கிராஸ் புகைப்படத்தின் கீழ் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்த ரசிகர் ஒருவர், "நீங்கள் அனைவரும் உள்ளாடைகளுடன் விளையாடுங்கள். அப்போது தான் மகளிர் கிரிக்கெட் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி அடையும். இதை ஏற்று கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் அது தான் உண்மை" என தெரிவித்திருந்தார்.

இதற்கு கேட் கிராஸ்,"உங்களுடைய விசித்திரமான யோசனைக்கு நன்றி. ஆனால் இதற்கு என்னிடம் முடியாது என்ற பதில் தான் உள்ளது" என பதிலளித்திருந்தார்.

அந்த ரசிகர் மீண்டும் அதில்,"இது விசித்திரமான யோசனை அல்ல. அது தான் வர்த்தக உண்மை. சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கூட உரிய அங்கீகாரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் கிடைக்காமல் உள்ளனர். அவர்களை உள்ளாடையுடன் களமிறக்கினால் ஸ்பான்சர்ஷிப் மற்றும் அதிக பார்வையாளர்கள் வருவார்கள்"என்று பதிவிட இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.