தனுஷூக்கு இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது - கதறி அழும் தனுஷ் ரசிகர்கள்

dhanush hotstar Maaran malavikamohanan karthicknaren
By Petchi Avudaiappan Mar 12, 2022 05:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

தனுஷின் மாறன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

'தொடரி', 'பட்டாஸ்' போன்ற படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷூடன் 3வது முறையாக இணைந்துள்ள மாறன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படமானது மார்ச் 11 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ராம்கி, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படம் வழக்கமான தமிழ் சினிமாவுக்கான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமாகியுள்ளது. அவர்கள் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டர் தளத்தில் கொட்டித் தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் படங்களை தொடர்ந்து தனுஷின் இப்படமும் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.