தினமும் இரண்டு முறை பூஜை - ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர்

Rajinikanth Madurai Jailer
By Karthick Aug 05, 2023 03:35 PM GMT
Report

நடிகர் ரஜினிக்கு கோவில் காட்டி தினமும் இரண்டு முறை செய்து வருகிறார் மதுரை சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர்.

ரஜினியின் தீவிர ரசிகர்   

தினமும் இரண்டு முறை பூஜை - ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் | Fans Builds Temple For Rajini

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அந்த பகுதியில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் அவர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றார். அவரை ரசிகர் என்பதை தாண்டி பக்தர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அவர் ரஜினியின் மீது மிக பெரிய அபிமானம் கொண்டு இருக்கிறார்.

ரஜினிக்கு பூஜை அறை 

தினமும் இரண்டு முறை பூஜை - ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் | Fans Builds Temple For Rajini

அதன்வெளிப்படாக அவர், தனது அலுவலகத்தில் ரஜினிக்கு தனியாக பூஜை அறை ஒன்றை உருவாக்கி அதில் ரஜினியை தினமும் இரண்டு முறை வழிபட்டு வருகின்றனர். ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரை அந்த அறையில் ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

தினமும் இரண்டு முறை பூஜை - ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் | Fans Builds Temple For Rajini

இந்த பூஜை அறையை அமைத்ததோடு மட்டுமில்லாமல், தினமும் காலை மாலை என இரண்டு முறையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றார்.